Friday, December 17, 2010

கணவன் மனைவி ஜோக்ஸ்

மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்...எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்... நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..


இரண்டு நண்பர்கள் பாரில்...
கண்ணா: சே!. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?
விநோத்: நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.
கண்ணா: ஆஆ.. அப்புறம்?
விநோத்: அப்புறம் சொன்னா.. "மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு



புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்....
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...
வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க...!??


கடவுள்: மனிதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவிலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுச் கொடு சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சைக் குறைக்கணும், நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும், எதையும் வாங்கிக் கொடுங்கன்னு கேட்கக் கூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?



மனைவி: நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்...!!

மனைவி: என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.
கணவன்: அடப்பாவி...! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?


மனைவி: என்னங்க.. நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்!!

1 comment:

  1. கணவனை மட்டம் தட்டற ஒரு ஜோக்கும் இல்ல...உலக மகா யோக்கியர்கள்!

    ReplyDelete